ஆரவாரம் ஆர்ப்பாட்டம்

அப்பா சந்நிதியில்

நாளெல்லாம் கொண்டாட்டம்

நல்லவர் முன்னிலையில்

நன்றி பாடல் தினமும் பாடுவோம்

நல்ல தேவன் உயர்த்திப் பாடுவோம்

 

1.

கல்வாரி சிலுவையிலே கர்த்தர்

இயேசு வெற்றிச்சிறந்தார்

கண்ணீரை மாற்றி நம்மை

காலமெல்லாம் மகிழ்ச் செய்தார்     – ஆரவாரம்

 

2.

கிறிஸ்துவை நம்பினதால்

பிதவுக்குப் பிள்ளையானோம்

அப்பான்னு கூப்பிடப்பண்ணும்

ஆவியாலே நிரப்பப்பட்டோம்       – ஆரவாரம்

 

3.

உயிர்த்த கிறிஸ்து நம்ம‌

உள்ளத்திலே வந்துவிட்டார்

சாவுக்கேதுவான நம்ம‌

சரீரங்களை உயிர்ப்பிக்கிறார்     – ஆரவாரம்

 

4.

ஆவிக்கேற்ற பலி செலுத்தும்

ஆசாரிய கூட்டம் நாம்

வெளிச்சமாய் மாற்றியவர்

புகழ்ச்சிதனை பாடிடுவோம்       – ஆரவாரம்

 

5.

துயரம் நீக்கிவிட்டார்

கொண்டாட்டத்தின் ஆடை தந்தார்

ஒடுங்கின ஆவி நீக்கி

துதி என்னும் உடையை தந்தார்      – ஆரவாரம்

 

6.

நீதியின் சால்வை தந்து

இரட்சிப்பாலே போர்த்துவிட்டார்

மணமகன் மணமகள் போல்

அலங்கரித்து மகிழ்கின்றார்     – ஆரவாரம்

 

7.

இயேசுவின் பெயராலும்

ஆவியிலும் கழுவப்பட்டோம்

நீதிமானாய் மாற்றப்பட்டு

தூய்மையான பிள்ளைகளானோம்  – ஆரவாரம்

 

8.

மூலைக்கல்லாம் கிறிஸ்துவின் மேல்

கட்டப்பட்ட மாளிகை நாம்

ஆவிதங்கும் ஆலயமாய்

வளர்கின்ற கோபுரம் நாம்         – ஆரவாரம்

 

9.

விண்ணகமே நம் நாடு

வருகைக்காக காத்திருப்போம்

அற்பமான நமது உடல்

அப்பா போல மாறிடுமே      – ஆரவாரம்



aaravaram aarbbadtam

abba chanth nithiyil

nalellam kondadtam

nallavar munnilaiyil

nanri batal thinamum baduvom

nalla thevan uyarththib baduvom

 

1.

kalvari siluvaiyile karthdhar

iyesu verrissiranththar

kannirai marri nammai

kalamellam makizs seythar     – aaravaram

 

2.

kirisa்thuvai nambinathal

bidhavukkub billaiyanom

abbannu kubbitabpannum

aaviyale nirabpabpaddom       – aaravaram

 

3.

uyirthdha kirisa்thu namma‌

ullaththile vanththuviddar

savukkethuvana namma‌

charirangkalai uyirbbikkirar     – aaravaram

 

4.

aavikkerra pali seluththum

aasariya kudtam nam

velischamay marriyavar

bukazssidhanai badiduvom       – aaravaram

 

5.

thuyaram nikkividdar

kondadtaththin aadai dhanththar

odungkina aavi nikki

thuthi ennum udaiyai dhanththar      – aaravaram

 

6.

nithiyin salvai dhanththu

iradsibbale borththuviddar

manamakan manamakal bol

alangkariththu makizkinrar     – aaravaram

 

7.

iyesuvin beyaralum

aaviyilum kazuvabpaddom

nithimanay marrabpaddu

thuymaiyana billaikalanom  – aaravaram

 

8.

mulaikkallam kirisa்thuvin mel

kadtabpadta malikai nam

aavidhangkum aalayamay

valarkinra koburam nam         – aaravaram

 

9.

vinnakame nam nadu

varukaikkaka kaththirubbom

arpamana namathu utal

abba bola maridume      – aaravaram